பாபநாசம் செய்தியாளர் ஆர். தீனதயாளன்
பாபநாசம் அருகே அய்யம்பேட்டையில் தனியார் கல்லூரியில் நடைபெற்ற போதை விழிப்புணர்வு நிகழ்ச்சி காவல் உதவி செயலியை காவல் ஆய்வாளர் மாணவர்களுக்கு அறிமுகம்…..
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா அய்யம்பேட்டையில் உள்ள ஸ்டார் லயன் கல்வியியல் கல்லூரியில் உலக சுகாதாரத் தினத்தை முன்னிட்டு போதை எதிர்ப்பு கழகம் சார்பில் போதை விழிப்புணர்வு நிகழ்ச்சி கல்லூரி முதல்வர் மில்டன் ராஜ் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் அய்யம்பேட்டை காவல் ஆய்வாளர் சாந்தி, கல்லூரி தாளாளர் கலியமூர்த்தி கலந்துகொண்டு காவல் உதவி செயலியை மாணவர்களுக்கு அறிமுகம் செய்து சிறப்புரையாற்றினர் இதில் மாணவர்கள் போதை விழிப்புணர்வு பற்றி கவிதை கதை நாடகம் உள்ளிட்டவற்றை செய்து காட்டி போதை விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் எழிலரசி ,முருகவேணி, இலக்கியா,ஸ்டெபி, காயத்ரி மற்றும் பேராசிரியர்கள் மாணவ மாணவிகள் என பலர் கலந்து கொண்டனர்.