துறையூரில் திமுக இளைஞர் அணி சார்பில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம்
துறையூர்
திருச்சி மாவட்டம் துறையூரில் வடக்கு மாவட்ட திமுக இளைஞர் அணி சார்பில் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. துறையூர் வடக்கு தெருவில் குணசீலன் திடலில் இளைஞர் அணி சார்பில் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து மாபெரும் கண்டன பொதுக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் ஏஆர்கே கார்த்திக், துணை அமைப்பாளர்கள் கீரம்பூர் முத்துதுரை சிலம்பரசன் ஆகியோர் வரவேற்புரை நிகழ்த்தினர்.
இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட கொள்கை பரப்பு செயலாளர் சபாபதி மோகன், தலைமை கழக இளம் பேச்சாளர் சார்மதி ஆகியோர் பேசும்போது, தேசிய கல்விக் கொள்கை வாயிலாக மாநிலங்களில் இந்தி மொழியை திணிப்பது,இந்தி மொழியை ஏற்றால் தான் தமிழ்நாட்டிற்கு கல்வி நிதி தரவோம் என்று கல்வி நிதி தராமல் தமிழ்நாட்டை வஞ்சிக்கும் செயல்களில் ஒன்றிய அரசு ஈடுபட்டு வருகிறது. இதை திமுக இளைஞர் அணி சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம் என்று பேசினர்.
இதில் எம்எல்ஏ ஸ்டாலின்குமார், மாவட்ட பொருளாளர் தர்மன் ராஜேந்திரன்,நகர செயலாளர் மெடிக்கல் முரளி,மாவட்ட துணை செயலாளர் சோபனபுரம் கனகராஜ்,ஒன்றிய செயலாளர்கள் அண்ணாதுரை, வீரபத்திரன், சிவ சரவணன், உப்பிலியபுரம் ஒன்றிய செயலாளர்கள் முத்து செல்வன், அர.ந.அசோகன், நகர் மன்ற தலைவர் செல்வராணி மலர்மன்னன், முன்னாள் ஒன்றிய சேர்மன் சரண்யா மோகன்தாஸ்,கலை இலக்கிய பேரவை மாவட்ட தலைவர் கஸ்டம்ஸ் மகாலிங்கம், விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட அமைப்பாளர் சுரேஷ்குமார்,விவசாய அணி மாவட்ட அமைப்பாளர் செங்கை செல்லமுத்து, வழக்கறிஞர் அணி மாவட்ட அமைப்பாளர் நரேஷ்குமார், மகளிர் அணி மாவட்ட அமைப்பாளர் கிருபா,மாவட்ட பிரதிநிதி மதியழகன், கார்த்திகேயன்,பொது குழு உறுப்பினர் கிட்டப்பா, நகர துணை செயலாளர்கள் பிரபு, இளங்கோவன், பொருளாளர் சீனிவாசன், அவைத்தலைவர் தர்மலிங்கம், இளைஞர் அணி ஸ்டுடியோ சசிகுமார்,நகர்மன்ற உறுப்பினர்கள் வீரமணிகண்டன், நித்யா கிருஷ்ணமூர்த்தி, முத்துமாங்கனி,சுதாகர், மாவட்ட பிரதிநிதிகள் ரெங்கநாதபுரம் கார்த்திக், கண்ணனூர் குமார்,காளிப்பட்டி வீ.சுப்ரமணியன், சிறுபான்மையினர் அணி வழக்கறிஞர் முகமது ரபீக், தொண்டரணி வழக்கறிஞர் யோகராஜ், வழக்கறிஞர் தமிழ் செல்வன், வழக்கறிஞர் சத்ய பிரகாஷ், சுரேஷ் ,18 வது வார்டு மோகன்,சூ மார்ட் சசி, நல்லுசாமி, மாணவரணி ரெங்கநாதபுரம் பிரபாகரன், அறிவொளி சுப்பிரமணியன்,தீனா, செங்கை பெரியசாமி, ராம்ராஜ், ஆட்டோ மணி மற்றும் வடக்கு மாவட்ட இளைஞர் அணி நிர்வாகிகள் ராஜேஷ் ,மருதுபாண்டியன், கலையரசன், நடராஜன் மற்றும் கழக நகர ஒன்றிய கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.நிகழ்சி நிறைவில் நகர துணை அமைப்பாளர் பிரபு நன்றி உரையாற்றினார்.
வெ.நாகராஜீ திருச்சி மாவட்ட செய்தியாளர்