மேட்டுப்பாளையம் அடுத்த கல்லாறு பகுதியில் செயல்பட்டு வரும் சச்சிதானந்தா ஜோதி நிகேதன் பன்னாட்டு பள்ளியில் ஏப்ரல் கூல் டே கொண்டாடப்பட்டது. இயற்கை சூழலை மேம்படுத்துவது மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாப்பது குறித்து மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளி நிர்வாகத்தின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் முதல் நாள் அன்று சுற்றுச்சூழல் மன்றத்தின் சார்பாக ஏப்ரல் கூல் டே அனுசரிக்கப்பட்டு வருகிறது .
இதை அடுத்து பள்ளி மாணவர்கள் இயற்கையை பாதுகாக்கும் விதமாக மரக்கன்றுகளை நட்டு வளர்க்க வேண்டும் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். தொடர்ந்து பேசிய பள்ளியின் செயலர் சிந்தனை கவிஞர் கவிதாசன் அனைவரும் இயற்கையை நேசிக்க வேண்டும் ஒவ்வொருவரும் இயற்கையை பாதுகாப்பதில் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று மாணவர்களிடம் கூறினார்.
இதை அடுத்து பள்ளி வளாகத்தில் மாணவர்களுடன் சேர்ந்து மரக்கன்றுகளை நட்டு வைத்தார். நிகழ்ச்சியில் பள்ளியின் முதல்வர் உமா மகேஸ்வரி, துணை முதல்வர் சக்திவேல் உட்பட ஆசிரியர்கள், மாணவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்