துறையூர்
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள கண்ணனூரில் உள்ள
இமயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 16வது மற்றும் இதயம் கல்வியியல் கல்லூரியின் 14வது பட்டமளிப்பு விழாகல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.இமயம் கல்வி குழுமத்தின் தாளாளர் ப.பெரியண்ணன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.பிரதீப்குமார் கலந்து கொண்டு இளங்கலை மற்றும் முதுகலை மற்றும் கல்வியியல் தேர்வில் தேர்ச்சி பெற்ற சுமார் 1000 மாணவர்களுக்கு “பட்ட” சான்றிதழ்களை வழங்கி பல்கலைக்கழகத் தகுதி பெற்ற மாணவர்களைப் பாராட்டினார்.
இந்த பட்டமளிப்பு விழாவில் துணைத் தாளாளர் பெ.சிவக்குமார், இமயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் சீ.அமுதா ஆகியோர் முன்னிலை வகித்தார்.விழாவில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் பேசுகையில், மாணவர்கள் கல்லூரி படிப்பை முடித்து வேலைக்காக கம்பெனிகளுக்கு நேர்காணல் செல்லும் போது அந்த கம்பெனியைப் பற்றிய விவரங்களை அறிந்து வைத்திருக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் தன்னம்பிக்கை, நேர்த்தியான பேச்சாற்றல், கேட்கும் கேள்விக்கு மட்டும் பதில் கூறுதல் உள்ளிட்டவைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று பேசினார்.
இவ்விழாவில் முசிறி கோட்டாட்சியர் ஆராமுத தேவசேனா,வட்டாட்சியர் மோகன், கல்லூரி பேராசிரியர்கள், அலுவலர்கள் ,பணியாளர்கள், கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.விழா நிறைவில் கல்வியியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் மு.பிரபாகரன் நன்றி உரையாற்றினார்.
வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்