திருக்கோவிலூர்,
தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறை ஒருங்கிணைந்த விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட நூலக ஆணை குழுவின் கீழ் இயங்கி வரும் திருக்கோவலூர் முழு நேர கிளை நூலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு வாசகர் வட்டக் குழு தலைவர் தமிழ்ச் செம்மல் சிங்காரஉதியன் தலைமை வகித்தார்.
பணி நிறைவு பெற்ற ராணுவ வீரர் கு.கல்யாணகுமார், எழுத்தாளர் மு.கலியபெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நூலகர் இரா.வசந்தி வரவேற்று பேசினார்
போட்டித் தேர்வு மாணவர்கள், சிறுவர்கள் மற்றும் வாசகர்கள் என அனைவருக்கும் வாசிப்பை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது.
இவற்றுடன் எதிர்வரும் கோடைகால விடுமுறையை பள்ளி மாணவர்கள் பயனுள்ள வகையில் பயன்படுத்துவதற்கு
பத்தாம் வகுப்பு பயின்று வரும் மாணவி செ. கோதை நாச்சியார் இன்று தனது அம்மா மீனாகுமாரி அவர்களுடன் இந்நிகழ்ச்சிக்கு வருகை தந்து மாணவர்கள் மற்றும் வாசகர்களின் கற்பனை திறனை வளர்த்துக் கொள்ளவும், எதிர்வரும் கோடை காலத்தை மாணவர்கள் பயனுள்ள வகையில் ஓவியம் வரைந்து பழகுவதற்காகவும், அதற்கான உபகரணங்களை நூலகர் வி.தியாகராஜனிடம் நன்கொடையாக வழங்கினார்.
நல்நூலகர் மு.அன்பழகன் மாணவி கோதை நாச்சியாருக்கு புரவலர் பட்டயம் வழங்கி பாராட்டிப் பேசினார்.
நூலகர் மு.சாந்தி நன்றி கூறினார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பணியாளர்கள் சு.சம்பத், ச.தேவி ஆகியோர் ஒருங்கிணைத்தனர் .