தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல் :9715328420.
உப்பாறு ஓடையின் குறுக்கே கட்டப்படும் தடுப்பணையை கதவணையாக அதாவது ஷட்டர் வைத்து கதவணையாக கட்ட வேண்டும் எனக் கோரிக்கை மனு
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டம் உப்பாறு ஓடையின் குறுக்கே இரண்டு பெரிய தடுப்பணைகள் தற்போது கட்டப்பட்டு வருகிறது உப்பாறு அணை கடந்த 20 ஆண்டுகளாக சரிவர மழை பெய்யாத காரணத்தால் வறண்டு அப்பகுதியில் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது.
பரம்பிக்குளம் ஆழியார் திட்டத்தின் கீழ் திருமூர்த்தி அணையில் இருந்து அரச்சூர் ஷட்டர் வழியாக ஆண்டுக்கு ஒரு முறை நீதிமன்ற உத்தரவின்படி உயிர் நீர் அதாவது குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது உப்பாறு ஓடையில் தடுப்பணை பெரிய அளவிலான தடுப்பணைகள் கட்டி தடுத்தால் குடிநீருக்கு வழங்கப்படும் நீர் அங்கேயே நின்று விடும் உப்பாறு அணைக்கு நீர்வரத்து வந்து சேராது.
எனவே கட்டக்கூடிய இரண்டு புதிய தடுப்பணைகளையும் கதவணைகளாக அதாவது ஷட்டர் வைத்து கட்ட வேண்டும். மற்றும் ஏற்கனவே பல்வேறு காலகட்டங்களில் சின்னதும் பெரியதுமாய் கட்டப்பட்ட உப்பாறு ஓடையில் 30க்கும் மேற்பட்ட தடுப்பணைகள் உள்ளது அவற்றிலும் கதவணைகள் அதாவது ஷட்டர் வைத்து கட்ட வேண்டும். அப்போதுதான் குடிநீருக்காக திறக்கப்படும் தண்ணீர் உப்பாறு அணையை வந்து சேரும்.எனவே உப்பாறு ஓடையில் உள்ள ஏற்கனவே கட்டப்பட்ட தடுப்பணைகளிலும் இப்போது புதிதாக கட்டப்படுகின்ற தடுப்பணைகளிலும் கதவு அணைகள் அதாவது ஷட்டர் வைத்து கட்ட வேண்டும் என பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டம், பெரியக்குமாரபாளையம் கிராமம் புல.எண். 422 உள்ள உப்பாறு ஓடையின் குறுக்கே ரூபாய் 7.98 மதிப்பீட்டு தடுப்பணை கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
மேலும் திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டம், நவனாரி கிராமம் க.ச.எண்.323-ல் உள்ள உப்பாறு ஓடையின் குறுக்கே 7.40 கோடி செலவில் தடுப்பணை கட்டும் பணி நடைபெற்று வருகிறது.