காஞ்சிபுரம் ஒன்றித்துக்கு உட்பட்ட விப்பேடு ஊராட்சியில் சமூக ஆர்வலரும், உயர் நீதிமன்ற வழக்கறிஞரும், மாமனிதர்கள் அறக்கட்டளை நிறுவனருமான
லயன் லூ.அருள்நாதன் பிறந்தநாள் முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் வழக்கறிஞர் பிரிவு மற்றும் இளைஞர் அணியினர் ஒன்றிணைந்து விருப்பத்துடன் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் ரத்ததானம் வழங்கி ஏழை எளிய மக்கள் பயன்படும் வகையில் இந்த ரத்ததானம் முகாம் அமைக்கப்பட்டு ரத்தக்கொடை அளித்து வருகின்றனர்.
அந்த வகையில் உயர் நீதிமன்ற வழக்கறிஞரும், சமூக ஆர்வலரும் , மாமனிதர்கள் அறக்கட்டளை நிறுவனருமான விப்பேடு அருள்நாதன் பிறந்த நாளை முன்னிட்டு விப்பேடு ஊராட்சி மன்ற தலைவர் வசந்தி அருள்நாதன் வரவேற்று ஆள்ளுபர மாலை அணிவித்து பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் அமைந்துள்ள அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் உள்ள இரத்ததான வங்கியில் மாபெரும் இரத்ததான முகாம் நடைபெற்றது. தொடர்ந்து 20 ஆண்டுகளாக நடைபெறும் இந்த இரத்ததான முகாமில், சுமார் 150க்கும் மேற்பட்ட அருள் ஜி பிரதர்ஸ் கலந்து கொண்டு இரத்ததானம், உடல் தானம் வழங்கி, மரக்கன்றுகளை நட்டனர்.அதைத் தொடர்ந்து அப்பகுதி மக்களுக்கு அறுசுவை அன்னதானமும் வழங்கப்பட்டது.