தாராபுரம் சிறிய அளவு பிரபு
செல்:9715328420
தாராபுரம்:ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு
தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மத்திய அரசு 100 நாள் வேலை நிட்ட பணியாளர்களை வஞ்சிக்கும் செயலை கண்டித்து தாராபுரம் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் தாராபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட தலைவர் ரகுபதி தலைமை தாங்கினார். தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் எம்.ரவி கோரிக்கை முழக்கப் போராட்டத்தை விளக்கி பேசினார்.
100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களை பழிவாங்காமல் வேலை செய்த அனைவருக்கும் கூலி பாக்கியை சட்டப்படி வட்டியோடு வழங்க வேண்டும். வேலை மறுக்கப்பட்ட நாட்களுக்கு சட்டப்படி வேலையின்மைக்கான படியை வழங்க வேண்டும்.
வேலை நாட்களை குறைக்காமல் தொழிலாளர்கள் உயிர்வாழ தொடர்ந்து வேலை கொடுக்க வேண்டும்.
ஒரு நாள் ஊதியத்தை ரூ.700 ஆக உயர்த்தி வழங்கிட வேண்டும். ஒரு ஆண்டிற்கான வேலை நாட்களை 200 நாட்களாக உயர்த்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோஷங்களை முழங்கினர்.
ஆர்ப்பாட்டத்தில் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க தாலுகா செயலாளர் லட்சுமணன், மூலலூர் ஒன்றிய செயலாளர் கருப்புசாமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.