கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த திருவயலூர் கிராமத்தில் சந்தூர் சாலையில் மாரியம்மன் கோவில் அருகே திருப்பத்தில் வேகமாக சென்ற கார் திடீரென மின்கம்பத்தில் பலமாக மோதி விபத்திற்குள்ளானது.
ஆம்பூர் அடுத்த ஏகஸ்பா என்ற பகுதியை சேர்ந்த யுவராஜ் மகன் சாம்குமார் வயது 19 மற்றும் அர்ரது நண்பர்களான பார்த்தசாரதி, பூவரசன், சத்தியபிரகாஷ் ஆகிய நால்வரும், பாரூரில் உள்ள செல்லக்குட்டப்பட்டி கிராமத்தில் நடைபெற்று வரும் திரௌபதி அம்மன் கோயிலுக்கு சென்று தரிசனம் முடித்துவிட்டு, பின்பு சந்தூர் சென்று தனது நண்பர் பூவரசனை இறக்கிவிட்டு வர சென்ற போது, கார் ஓட்டிய சாம்குமார் காலில் உள்ள செருப்பு ஆக்ஸிலேட்டரில் சிக்கி, அதிக அழுத்தத்துடன் செலுத்தியதால் வளைவில் உள்ள மின்சார கம்பத்தில் பலமாக மோதி மின்சார கம்பம் உடைந்து பெரும் விபத்து ஏற்பட்டது.
நல்வாய்ப்பாக அனைவரும் சில்பெல்ட் அணிந்திருந்ததால் பலூன் வெளியாகி அனைவரின் உயிரையும் காப்பாற்றியது. காரிலிருந்து நால்வரும் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். இதையடுத்து அங்கு விரைந்து வந்த போச்சம்பள்ளி போலீசார் சாலையின் இருபுறமும் போக்குவரத்தை நிறுத்து மாற்று பாதையில் போக்குவரத்தை திருப்பினர்.
பின்னர் விரைந்து வந்த போச்சம்பள்ளி மின்வாரிய அலுவலர்கள் உடனடியாக மின்சாரத்தை துண்டித்து, உடைந்த மின்கம்பத்தை அகற்றினர். சுமார் அரை மணி நேரத்திற்கு பிறகு போக்குவரத்து சீர் செய்யப்பட்டது. விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.