செங்குன்றம் செய்தியாளர்
சென்னை மேற்கு மாவட்டம் மாதவரம் தெற்கு மண்டல் பாஜகவின் சார்பில் மாதவரம் பழைய பஸ் நிலையம் அருகே தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.
மருத்துவ பிரிவு மாநில செயலாளர் டாக்டர் கோமதி எம் பி பி எஸ் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு மாநில தலைவர் அமர் பிரசாத் ரெட்டி, தமிழ் இலக்கியம் மற்றும் தமிழர் நலப் பிரிவு மாநில தலைவர் ஆதித்யா ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கோடை காலத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு நீர் மோர் பந்தலை திறந்து வைத்த அவர்களுக்கு தர்பூஸ் பழங்கள் குளிர்பானங்கள் நீர்மோர் வழங்கினார்கள் இதில் நிர்வாகிகள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மேலும் விளையாட்டு மற்றும் மேம்பாட்டு பிரிவு மாநில தலைவர் அமர் பிரசாத் ரெட்டி பேசும் போது , தமிழக தலைவர் அண்ணாமலை டெல்லி சென்றாலும் அங்கு கட்சி தலைமையை ஏற்று யார் யாருக்கு என்னென்ன பொறுப்புகள் என்பது பற்றி முடிவெடுத்தாலும் தலைவரின் ஆலோசனைப்படி நாங்கள் செயல்படுவோம் என தெரிவித்தார்.