நிகழ்ச்சியில் அதிமுக அமைப்பு செயலாளர் ஐ.மகேந்திரன், முன்னாள் அரசு தலைமைக் கொறடா தாமரை எஸ்.ராஜேந்திரன் ஆகியோர் பங்கேற்று தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர்மோர், ரஸ்னா, வெள்ளரி, தர்பூசணி ஆகியவற்றை வழங்கினர். நிகழ்ச்சியில் நகரச் செயலாளர் செந்தில், அம்மா பேரவை மாவட்டச் செயலாளர் சங்கர், இணைச் செயலாளர் பிரேம்குமார் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.