புதியதாக நியமிக்கபட்டுள்ள புதுச்சேரி குழந்தைகள் உரிமை மற்றும் பாதுகாப்பு ஆணையத்தின் சேர்மன் சிவராமன் மற்றும் உறுப்பினர்கள் சிவக்குமார், முருகசாமி, ஜெகநாதன், கோமுகி, கார்குழலி கலைச்செல்வி ஆகியோர் மரியாதை நிமித்தமாக கவர்னர் கைலாசநாதனை சந்தித்தனர்,
புதியதாக நியமிக்கப்பட்ட சேர்மன் மற்றும் உறுப்பினர்களுக்கு கவர்னர் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார், மேலும் சிறார்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் வகையில் சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்றும் ஆணையத்தின் செயல்பாடுகளுக்கு அரசு உறுதுணையாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.