புதிய தலைவருக்கான போட்டியில் நான் இல்லை – பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி..
கோவை விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,நாடாளுமன்றத்தில் இன்று ஒரு சரித்திரம் நடந்து இருக்கின்றது. ஒரு கோடி கருத்துக்களை கேட்டு இன்று வக்பு சட்டம் லோக்சபா மற்றும் ராஜ்ய சபாவில் நிறைவேறி உள்ளது.
13 மாற்றங்களை கொண்டு வந்து வக்பு மசோதா நிறைவேற்றபட்டுள்ளது.ஏழை இஸ்லாமியர்களுக்கு இது வரப்பிரசாதம்.வக்பு சொத்தை பராமரிக்க சட்டம் கொண்டு வரப்பட்டு, அது சுதந்திரத்திற்கு
பின்பு முறையான போர்டாக 1954 ல் மாற்றப்பட்டு,1995 ல் பெரிய அளவில் மாற்றம் செய்யப்பட்டது.
2013 ல் சில திருத்தங்களை காங்கிரஸ் கட்சி கொண்டு வந்தது. அதனை தொடர்த்து இப்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.2013ம் ஆண்டு வரை வகுக்கு கீழ் பதினெட்டு லட்சம் ஏக்கர் சொத்துக்கள் இருந்த நிலையில் 2013 முதல் 25 வரை அது கூடுதலாக 21 லட்சம் ஏக்கர் சொத்துக்கள் என தற்போது 39 லட்சம் ஏக்கர் நிலம் வக்பு போர்டிடம் இருக்கின்றது.கடந்த 12 ஆண்டுகளில் 21 லட்சம் ஏக்கர் சேர்க்கப்பட்டுள்ளது.
நாட்டிலேயே ரயில்வே மற்றும் வக் போர்டில் தான் தனிநபர் சொத்தாக அதிக சொத்துக்கள் இருக்கிறதுஅரசின் சொத்தை வக்போர்டு என சொன்னால் ஆட்சியர் லெவலுக்கு மேல் இருக்கும் அதிகாரி ஆய்வு செய்யப்பட வேண்டும்.
வக்பு போர்டில் சியா , சன்னி பிரிவுகள் மட்டுமின்றி போரா உட்பட பிற இஸ்லாமிய சமூகங்களும் சேர்க்கப்பட்டுள்ளது.முதல்வர் உட்பட தமிழகத்தில் சில அரசியல் கட்சியினர் பொய் சொல்கின்றனர். இஸ்லாம் இல்லாதவர்களை சேர்ப்பதாக சொல்கின்றனர்.கிறிஸ்தவ சர்ச் இடங்களை வக்பு போர்டு தங்கள் இடம் என எடுத்து இருக்கின்றனர்.பெண்களுக்கு பல உதவிகள் கிடைக்கும் வகையில் இந்த வக்பு சட்ட திருத்தம் செய்யப்பட்டுள்ளது்
NDA கூட்டணியில் இல்லாத கட்சிகள் ஜெகன்மோகன்,நவீன் பட்நாயக் கட்சிகளை சேர்ந்தவர்களும் இதில் ஆதரவாக வாக்களித்து இருக்கின்றனர்.இது இஸ்லாம் மக்களுக்கு எதிரான சட்டம் கிடையாது.39 லட்சம் ஏக்கர் நிலம் மூலம் 126 கோடி வருவாய் வந்துள்ளது. முறையாக நிர்வாகம் செய்யபட வில்லை. முறையாக நிர்வகித்தால் 10 ஆயிரம் கோடி வருவாய் வரும்.பாதி இடங்களில் வக்பு சொத்துகளை திமுகவினர் ஆக்கிரமித்து வைத்து இருக்கின்றனர்.
பிரதமர் மோடிக்கு தமிழக பா.ஜ.க சார்பில் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கின்றோம்.
திமுகவினர் விழாவாக கோவை மருதமலை குடமுழுக்கு விழா நடந்து இருக்கின்றது.கும்பாபிஷேக விழாவில் 750 சிறப்பு பாஸ் வழங்கப்பட்டு அதுவும் திமுக கரைவேட்டிக் கட்டியவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு பக்தர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.மருதமலை முருகனை அவமானப்படுத்தி இருக்கின்றனர்.
வன்மையாக கண்டிக்கின்றோம். எந்த அமைச்சர்களுமே இதில் கலந்து கொள்ள வில்லை. ஏன் கலந்து கொள்ள வில்லை.குறிப்பாக அமைச்சர் சேகர்பாபுவின் மனைவி மற்றும் மகள் உள்ளிட்டோர் சைரன் வைத்த காரில் கான்வாய் வாகன மூலம் இந்த விழாவில் பங்கேற்றுள்ளது கண்டிக்கத்தக்கது.இதே போல் தான் ஸ்ரீரங்கம் திருக்கோவிலில் சொர்க்கவாசல் திறப்பின் போது அங்கு காத்திருந்த பக்தர்களை புறந்தள்ளி அமைச்சர் சேகர்பாபுவின் குடும்பத்தினர் அங்கும் தரிசனம் செய்தனர்.
பா.ஜ.க 2026 தேர்தலை எப்படி எதிர் கொள்வது என்பது உட்பட ஏற்கனவே விரிவாக பேசி இருக்கின்றோம்.இதற்கு மேல் கருத்து சொல்ல விரும்ப வில்லை.புதிய மாநில தலைவருக்கான தேர்தல் விரைவில் நடைபெறும்.
எதற்கு போராட்டம் என தெரியாமல் தவெக போராட்டம் நடத்தி கொண்டு இருக்கின்றனர்.
புதிய தலைவருக்கான போட்டியில் நான் இல்லை.பாஜகவில் புதிய தலைவர்களை தேர்ந்தெடுக்க போட்டியெல்லாம் வைக்க மாட்டார்கள்.மூத்த தலைவர்கள் முடிவு செய்து தேர்ந்தெடுப்பார்கள். அதனால் தான் நான் போட்டியில் இல்லை என்று சொல்கிறேன்.
திமுகவின் நீட் நாடகம் முடிவிற்கு வந்து விட்டது.சுப்ரீம் கோர்டிற்கு மட்டும் போக மாட்டார்கள்.தைரியம் இருந்தால் சுப்ரீம் கோர்ட் போகட்டும்.பா.ஜ.கவில் தலைவர் பதவிக்கி யாரும் போட்டியில் இல்லை. நான் மாநில தலைவராக இல்லை என்றால் நீங்கள் யாரும் மதிக்க மாட்டீர்ரகளா ?
விரைவில் மத்திய அமைச்சராக எதிர்பார்க்கலாமா என்ற கேள்விக்கு ,இந்த மண்ணை விட்டு எங்கும் போக மாட்டேன். இங்குதான் சுற்றிக் கொண்டிருப்பேன் என்றும் பதில்.டாஸ்மாக் வழக்கை பக்கத்து மாநிலத்திற்கு மாற்ற வேண்டும் என முதல்வர் கேட்கின்றார்.
13 அமைச்சர்கள் மீது போடப்பட்ட வழக்கை ஏன் பக்கத்து மாநிலத்துக்கு கேட்கவில்லை.உங்கள் மடியில் கனம் இருக்கிறது வழியில் பயம் இருக்கிறது எதையும் மறைக்க முயற்சிக்கிறீர்கள் டாஸ்மாக் வழக்கில் கயிறு இருக்கத்தான் போகிறது. அமலாக்கத்துறை நேர்மையான முறையில் விசாரிக்க வேண்டும் கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மக்கள் வரிப்பணத்தை திரும்ப கொண்டு வந்து சேர்க்க வேண்டும் என தெரிவித்தார்.