செய்தியாளர் பார்த்தசாரதி

புதுச்சேரி வில்லியனூர் வட்டார அளவிலான பாலின விழிப்புணர்வு பிரச்சாரம் இதில் வில்லியனூர் வட்டாரத்துக்கு உட்பட்ட 42 பஞ்சாயத்து அளவிலான மகளிர் கூட்டமைப்பு சார்ந்த சமூக மேம்பாட்டு குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்

புதுச்சேரி அரசு ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் இயங்கி வரும் வில்லியனூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வட்டார அளவிலான பாலின விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது இதில் பாலின தோழிகள் பஞ்சாயத்து அளவில் ஆன கூட்டமைப்பின் பொறுப்பாளர்கள் சமூக வல்லுனர்கள் மற்றும் கணக்காளர்கள் என 500க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் வில்லியனூர் பெரிய கோவில் கலையரங்கத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு ராஜா மண்டபத்தை அடைந்தனர்

நிகழ்ச்சியில் வில்லியனூர் வட்டார வளர்ச்சி அதிகாரி தயானந்தா டென்டுல்கர் வரவேற்புரையாற்றினார் முதலமைச்சர் திரு. ரங்கசாமி அவர்கள் தலைமை ஆற்றினார் திரு. நமச்சிவாயம் உள்துறை அமைச்சர் திரு. தேனி ஜெயக்குமார் வேளாண்துறை அமைச்சர் திரு. சாய் ஜெ சரவணன் குமார் ஆதி திராவிட நலத்துறை அமைச்சர் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்

மேலும் இரா .சிவா சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் திரு அங்காளன் திருவானை தொகுதி ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரையாற்றினார்கள் குலத்துங்கன் IAS அவர்கள் செயலாளர் ஊரக வளர்ச்சித் துறை இஷிதா ராட்டி திட்ட இயக்குனர் இதனைத் தொடர்ந்து இணை வழி குற்றப்பிரிவு காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் வில்லியனூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சரண்யா மகளிர் சட்ட ஆலோசனை மைய முதுநிலை வழக்கறிஞர் ரீனா ஐஸ்வர்யா அவர்கள் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை பாலின விழிப்புணர்வு சந்தான லட்சுமி அவர்கள் அனைவரும் கலந்து கொண்டனர் இறுதியில் இணை வட்டார வளர்ச்சி அதிகாரி கலைமதி அவர்கள் நன்றியுரை ஆற்றினார்கள்

Share this to your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *