கரூர் செய்தியாளர் மரியான் பாபு
தமிழக வெற்றிக்கழகம் சார்பில் தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வக்பு சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கரூர் மாவட்ட தமிழக வெற்றி கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
மத்திய அரசின் வக்பு சட்ட திருத்தத்திற்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் இன்று மாவட்ட தலைநகரங்களில் தமிழகம் வெற்றி கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது
அதனை தொடர்ந்து கரூர் மாவட்ட தமிழக வெற்றி கழகம் சார்பில் கரூர் தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் கரூர் மேற்கு மாவட்ட தலைவர் மதியழகன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஏழை, எளிய இஸ்லாமியர்களின் நலன் காப்பதற்காக வக்பு சட்டத்தை கொண்டு வந்ததாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் உள்ள அனைத்து எதிர்கட்சிகளும் வக்பு சட்டம் என்பது இஸ்லாமியருக்கு எதிரான சட்டம் எனக் கூறி சட்டத்த அமல்படுத்தும் போது எதிர்ப்பு தெரிவித்தனர். ஆயினும் அதனை மீறி சட்டம் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக தமிழக வெற்றி கழகம் சார்பில் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் வக்பு சட்டத்திற்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவித்து, அதன்படி தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கரூர் மேற்கு மாவட்டத்தை சேர்ந்த கட்சியின் நிர்வாகிகள் சுமார் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசின் வக்பு சட்டத்திற்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.