பாபநாசம் செய்தியாளர் ஆர். தீனதயாளன்
பாபநாசம் அருகே சக்கராப்பள்ளி சக்கரவாகேஸ்வரர் கோவிலின், சப்தஸ்தான விழா..கொடியேற்றத்துடன் தொடங்கிய நிகழ்ச்சியில், திரளான பக்தர்கள் பங்கேற்பு..
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே அமைந்துள்ள சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவிலின் இணை கோவிலும். திருஞானசம்பந்தர் மற்றும் திருநாவுக்கரசரால் பாடல் பெற்ற தலமான சக்கராப்பள்ளி சக்கரவாகேஸ்வரர் திருக்கோவில் சப்தஸ்தான விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவை முன்னிட்டு தேவநாயகி அம்பாள் சமேத சக்கரவாகேஸ்வரர் சுவாமிக்கு மஞ்சள் தேன், சந்தனம்,பால் மூலப் பொருட்களால் அபிஷேகங்கள் செய்து சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருள, சிவனடியார்கள் சிவகைலாய வாத்தியங்கள் முழங்க கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தொடர்ந்து தீபாராதனை நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை திருக்கயிலை சிவ பூத கணத் திருக்கூட்டம் சிவனடியார்கள் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் செய்திருந்தனர்.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பல்லக்கு ஏழூர் புறப்பாடு வருகின்ற ஏப்ரல் 13- தேதியில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.