அரியலூர், மதிமுக முதன்மைச் செயலர் துரை.வைகோ பிறந்த நாளையொட்டி,அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில், அக்கட்சியின் சார்பில் இன்று அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
மதிமுக மாவட்டச் செயலர் ராமநாதன் தலைமையிலான நிர்வாகிகள், அரியலூர் நகரத்திலுள்ள கோதண்டராமசாமி திருக்கோயிலில், பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தினர். அதனைத் தொடர்ந்து, அங்கு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர்.
முன்னதாக விளாங்குடியிலுள்ள வேதா கருணை இல்லம், அரியலூரிலுள்ள சாந்தம் முதியோர் இல்லம் உள்ளிட்ட இடங்களிலும் அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில், ஒன்றியச் செயலர் சங்கர், நிர்வாகிகள் வாரணவாசி ராஜேந்திரன், கொளஞ்சி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.