வேதாரண்யம் வட்டாரத்திற்கான ஆதார் சிறப்பு முகாம் மருதூரில் ஏப்ரல் 15 வரை நடக்கிறது!ஆயிரம் பேர்களை கடந்து ஆதார் திருத்தம் செய்தனர். அஞ்சல்துறை சாதனை!
வேதாரண்யம் வட்டார அளவில் உள்ள பொதுமக்கள் மாணவர்கள் தாய்மார்கள் ஆதார் அட்டை தொடர்பான பல்வேறு திருத்தங்களுக்காக இதுவரை செயல்பட்டுவரும் இரண்டு இடங்களில் மிகுந்த கூட்ட நெரிசலிலும் அலைச்சலுக்கும் ஆளாகி வந்தனர்.ஊரக கிராம பகுதிகளில் உள்ள பொதுமக்கள் பயன்பெறும் வகையில் சிறப்பு முகாமினை பட்டுக்கோட்டை அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளர் நடத்த ஆணையிட்டார்.
இதன்படி கடந்த மார்ச் 18 முதல் சிறப்பு முகாம் மருதூர் வடக்கு வீரப்பன் ஜெயலட்சுமி நினைவுக் கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இதுவரை 1000க்கும் மேற்பட்ட மக்கள் ஆதார் அட்டை திருத்தம் செய்தல், புதுப்பித்தல், குழந்தைகளுக்கான புதிய ஆதார் எடுத்துள்ளனர்.
இது அஞ்சல்துறை மூலம் கிராம பகுதியில் நிகழ்த்தப்பட்ட சாதனையாக பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.மேலும் வரும் ஏப்ரல் 15 வரை இம்முகாமில் பொதுமக்கள் பயன் பெற பட்டுக்கோட்டை கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் திரு. ரகுராமகிருஷ்ணன் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்.