மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பங்கேற்றார்…

மதுரையில் துவங்கி இரண்டாவது நாளாக நடை பெற்று வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந் திய மாநாட்டில் மாநில உரிமைகள் பாது காப்பு கருத்தரங்கில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பங்கேற்றார்.
மதுரை தமுக்கம் மைதானத் தில் தொடங்கிய இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக, கூட்டாட்சி கோட்பாடே இந்தியாவின் வலிமை’ என்ற தலைப்பில் மாநில உரிமைகள் பாதுகாப்பு கருத்தரங்கு, ராஜா முத்தையா மன்றத்தில் நடைபெற்றது.
இந்தக் கருத்தரங்கிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் தலைமை தாங்கி பேசினார். மதுரை மாநகர் மாவட்டச் செயலர் கணேசன் வரவேற்றார். கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் காரத் துவக்கவுரையாற்றினார்.
கருத்தரங்கில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயன், கர்நாடக மாநில அமைச்சர் கிருஷ்ண பைரே கவுடா ஆகியோர் சிறப்புரையாற்றினர். மதுரை புறநகர் மாவட்டச் செயலர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.
கருத்தரங்கில் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர்கள், மத்தியக் குழு உறுப் பினர்கள், பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.