உகாதி பண்டிகை தீர்த்த குட ஊர்வலத்தில் நடனமாடி அசத்திய மகளிர்.
தெலுங்கு வருட பிறப்பை தமிழ்நாட்டில் யுகாதி பண்டிகை என கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் கோவில்களுக்கு தீர்த்த குடம் ஏந்தி ஊர்வலமாக சென்று அம்மனுக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் செய்து தீர்க்க கூட புனித நீரை ஊற்றி வழிபாடு செய்வார்கள்.

இதன்படி பல்லடம் பச்சாபாளையம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அவிநாசி சென்று அங்குள்ள தெப்பக்குளத்தில் தீர்த்தம் முத்தரித்து பல்லடம் மங்கலம் ரோட்டில் உள்ள விநாயகர் கோவிலிலிருந்து மேளதாளத்துடன் ஊர்வலமாக சென்றனர். மேளதாளத்தின் இசைக்கு ஏற்ப ஆண்கள் பெண்கள் உள்ளிட்டோர் நடனம் ஆடினர் இதில் ஆண்களை விட பெண்கள் அசத்தலாக நடனம் ஆடி மகிழ்ந்தனர்.

மங்களம் ரோட்டில் துவங்கிய தீர்த்த குட ஊர்வலம் பட்டேல் ரோடு வழியாக சென்று பச்சாபாளையம் மாகாளியம்மன் கோவிலை அடைந்தது. அங்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று தீர்க்க கூட கலச நீர்களால் அபிஷேகம் நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

Share this to your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *