மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் பேட்டி..இன்ஸ்பெக்டரை துப்பாக்கியால் சுட முயன்றதால் தற்காப்புக்காக ரவுடி மீது என்கவுண்ட்டர்

மதுரையில் இன்ஸ்பெக்டரை துப்பாக்கியால் சுட முயன்ற தால் தற்காப்புக்காக ரவுடி என்கவுண்ட்டரில் சுடப்பட்டார், என மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் கூறினார்.
‘மதுரையில் ரவுடி சுபாஷ் சந்திரபோஸ் போலீசாரால் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார் என்ற தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் சென்றார். அங்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பூமிநாதன் நடந்த சம்பவங்கள் அனைத்தையும் அவரிடம்
விரிவாக தெரிவித்தார்.
போலீசாரை தாக்கிய பெரிய கத்தி மற்றும் சுபாஷ் சந்திர போஸ் வைத்திருந்த நாட்டு துப்பாக்கி போன்றவற்றை ஆணையரிடம் காண்பித்தார்.
இதைதொடர்ந்து மாநகர காவல் ஆணையர் லோகநாதன் நிருபர்களிடம் கூறும் போது:-சுபாஷ் சந்திரபோசுக்கு காளீஸ்வரன் கொலை வழக்கு மற்றும் பல்வேறு கொலை வழக்குகளில் தொடர்பு இருக்கிறது.
இந்த நிலையில் அவரை கைது செய்வ தற்கான முயற்சி களில் ஈடுபடும் போது துப்பாக்கியை வைத்து போலீஸ் இன்ஸ்பெக்டரை சுட முயன்றுள்ளார். இதனால் பாதுகாப்பு கருதி துப்பாக்கியால் சுட்டதில் சுபாஷ் சந்திர போஸ் உயிரிழந்துள்ளார். மேலும், மதுரை மாநகர் பகுதியில் தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபடக்கூடிய நபர்கள் மீது சட்டரீதியான
நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறினார்.