போடிநாயக்கனூர் நகராட்சி நகர் மன்ற கூட்டத்தில் பாஜக கவுன்சிலர்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் நகராட்சி மாதாந்திர சாதாரண கூட்டம் அதன் தலைவர் ராஜராஜேஸ்வரி சங்கர் தலைமையில் நகராட்சி ஆணையாளர் எஸ் பார்கவி முன்னிலையில் நடைபெற்றது

இந்த கூட்டத்தில் நகராட்சி கவுன்சிலர்கள் தங்கள் வார்டு பகுதிகளில் நகராட்சி செய்ய வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்து பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தார்கள் இதனை தொடர்ந்து போடி நகர் பகுதியில் அமைந்துள்ள அரசு டாஸ்மாக் கடையை அகற்றுவதற்கு நகராட்சி சார்பில் தீர்மானம் நிறைவேற்றி அதை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி பாஜக கவுன்சிலர்கள் சித்ராதேவி தண்டபாணி எஸ் மணிகண்டன் ஆகிய இரண்டு கவுன்சிலர்களும் நகர் மன்ற தலைவர் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனால் நகராட்சி நகர்மன்ற கூட்ட அரங்கில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து பாஜக நகர்மன்ற கவுன்சிலரும் போடிநாயக்கனூர் பாஜக நகரத் தலைவருமான சித்ராதேவி தண்டபாணி கூறும் போது பொதுவாக நகர் மற்றும் பேரூராட்சி பகுதிகளில் கோவில் பள்ளி வளாகம் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் டாஸ்மாக் மதுபான கடைகள் வைக்க கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது ஆனால் போடி நகரின் இதய பகுதியான மக்கள் அதிகம் கூடும் இடத்தில் அமைந்துள்ள தமிழக அரசின் டாஸ்மாக் கடையை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் இதனை வலியுறுத்தி நகர்மன்ற கூட்டத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டோம் அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் இதற்கும் செவிசாய்க்கவில்லை என்றால் பாஜக கட்சி தலைமையிடம் ஆலோசித்து அந்த மதுபான கடையை வேறு இடத்தில் மாற்றும் வரை எங்களின் அறப் போராட்டம் தொடரும் என்றார் உடன் பாஜக நகர்மன்ற கவுன்சிலரும் பாஜக நகர பொதுச்செயலாளருமான எஸ் மணிகண்டன் மற்றும் பலர் உடன் இருந்தனர்

Share this to your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *