விருத்தாசலம்,
விருத்தாசலம் அடுத்த ஆலடி கிராமத்தில் அதிமுக விருத்தாசலம் வடக்கு ஒன்றியம் சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடந்தது. ஒன்றிய செயலாளர் வேல்முருகன் தலைமை தாங்கினார்.
விருத்தாசலம் நகர செயலாளர் சந்திரகுமார் முன்னிலை வகித்தார். மாவட்ட துணை செயலாளர் இன்ஜினியர் ரவிச்சந்திரன் கலந்துகொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்கினார்.
இதில் மாவட்ட சார்பணி நிர்வாகிகள் வேல்முருகன், தேவபிரசாத், ஒன்றிய துணை செயலாளர் தினேஷ் குமார், ஒன்றிய பொருளாளர் வெங்கடேசன், மாவட்ட பிரதிநிதி ஜெமினி ரவி, எம்ஜிஆர் மன்ற செயலாளர் சுப்பிரமணியன், ஒன்றிய எம்ஜிஆர் மன்ற இளைஞர் அணி செயலாளர் குபேர தேவதாஸ், இளைஞர் பாசறை செயலாளர் விக்னேஷ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.