காஞ்சிபுரம் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் மற்றும் பம்மல் சங்கரா கண் மருத்துவமனை இணைந்து கடுக்கப்பட்டு கிராமத்தில்
ஜனகம் HP கேஸ் ஏஜென்சீஸ் அலுவலகத்தில் நடத்திய மாபெரும் இலவச கண்புரை அறுவை சிகிச்சை தேர்வு முகாமில் 52 நபர்கள் கலந்து கொண்டனர். 15 பேர் (ஆ 08+பெ 07) இலவச லேசர் கண் புரை அறுவை சிகிச்சைக்காக தேர்வு செய்யப்பட்டு பம்மல் சங்கரா கண் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
கண்ணொளி பார்வை பாதுகாப்பு திட்டத்தின் மூலம் முதல்வர் காப்பீடு மற்றும் பிரதமர் காப்பீடு அட்டை உள்ள பயனாளர்களுக்கு லேசர் சிகிச்சை வழங்கப்படும்.
முகாமில் கலந்து கொண்ட அனைவருக்கும் தேனீர், சிற்றுண்டி,மோர் மற்றும் உணவு வழங்கப்பட்டது. முகாமிற்கு உதவிய பம்மல் சங்கரா கண் மருத்துவக் குழுவினர்களுக்கும்,ஏழை மாணவர்கள் நல சங்கத்திற்கும், ஜனகம் HP கேஸ் ஏஜென்சீஸ் ஊழியர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். இப்படிக்கு, தா. சுந்தரராமன், உரிமையாளர், ஜனகம் HP கேஸ் ஏஜென்சிஸ், கடுக்கப்பட்டு.