விருத்தாசலம்
விருத்தாசலம் தலைமை தபால் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் முருகையன் தலைமை தாங்கினார். வட்டக்குழு நிர்வாகிகள் வேல்முருகன், சின்னத்துரை, சுந்தரலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட நிர்வாகிகள் சுப்ரமணியன், கோவிந்தராசு, அம்பிகா, ரமேஷ், இளந்தென்றல், விநாயகமூர்த்தி, மங்களூர் ஒன்றிய செயலாளர் நிதி உலகநாதன், விருத்தாசலம் வட்ட செயலாளர் பாலமுருகன் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள்.
இதில் விவசாயிகள் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் கலந்து கொண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தில் நூறு நாட்களுக்கும் வேலை வழங்க வேண்டும். செய்த வேலைக்கு கூலி வழங்க வேண்டும், கூலி பாக்கியை வட்டியோடு வழங்க வேண்டும், உயிர் வாழ தொடர்ந்து வேலை வழங்க வேண்டும், ஒரு நாள் ஊதியமாக ரூபாய் 700 வழங்க வேண்டும், வேலை நாட்களை 200 நாளாக உயர்த்த வேண்டும், கூடுதலாக நிதி ஒதுக்க வேண்டும், தமிழ்நாட்டிற்கு கொடுக்க வேண்டிய நிதியை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஒன்றிய மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.