பா வடிவேல் அரியலூர் செய்தியாளர்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஒன்றியம் புதுச்சாவடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது.
வட்டார வளமைய மேற்பார்வையாளர் கண்ணதாசன் தலைமை வகித்து வாழ்த்துரை வழங்கினார்.
தலைமை ஆசிரியர் சாந்தி அனைவரையும் வரவேற்றார். பள்ளி மேலாண்மை குழுத் தலைவி துர்காதேவி, துணைத்தலைவி கனிமொழி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஜெயங்கொண்டம் அரசினர் மாதிரி மேல்நிலைப்பள்ளி அறிவியல் ஆசிரியர் பிரகாஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார்.
மாணவர்களுடைய கலைத்திறன் படைப்புகளான சுற்றுச்சூழல் பாதுகாப்பு , பேராசை பெருநஷ்டம், இயற்கை பாதுகாப்போம் செயற்கை கைவிடுவோம் போன்ற விழிப்புணர்வு நாடகங்கள்,
மதுவினால் ஏற்படும் தீமைகள் ,பாலித்தீன் பைகளை மஞ்சள் பைகளை கொண்டு விரட்டுவோம் ,சாலை பாதுகாப்பு போன்ற விழிப்புணர்வு பாடல்கள்,
இரண்டாம் வகுப்பு மாணவி கீர்த்தி அசத்தல் ஆங்கில சொற்பொழிவு, தமிழர்களின் பாரம்பரிய கலைகளை விளக்கும் விதமாக விவசாயம் காப்போம், பரதநாட்டியம் , நீர் நிலம் காற்று பாதுகாத்தல் ,ஆகிய விழிப்புணர்வு நடனங்கள் , ஆடல்கள் ஆகியன இடம் பெற்றிருந்தன.ஓவியம் , பேச்சு, திருக்குறள் ஒப்புவித்தல் போன்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
மாவட்ட அளவில் நடைபெற்ற சுற்றுச்சூழல் விழிப்புணர் கண்காட்சியில் வெற்றி பெற்று 7 ஆயிரம் பரிசு தொகையினை 7 ஆம் வகுப்பு மாணவி கிருபா, 6 ஆம் வகுப்பு மாணவி ரசிகா ஆகியோர்களுக்கு வட்டார வளமைய மேற்பார்வையாளர் கண்ணதாசன், தலைமை ஆசிரியர் சாந்தி மாணவர்களின் பெற்றோர்கள் முன்னிலையில் வழங்கப்பட்டது.
அறிவியல் பட்டதாரி ஆசிரியர் செங்குட்டுவன் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் மற்றும் தொகுப்பாளராகவும் செயல்பட்டார்.பள்ளி ஆசிரியர்கள் ஹேமலதா, ஜெயப்பிரியா, பவானி, கவிதா, ஆய்வகத் தொழில்நுட்ப பயின்றுனர் சுஜிதா ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
பெற்றோர்கள், பொதுமக்கள் ,பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், காலை , மதிய உணவு அமைப்பாளர்கள் சமையலர்கள் ,தூய்மை பணியாளர்கள், பல்வேறு பள்ளி ஆசிரியர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். கணித ஆசிரியர் செல்லதுரை நன்றி கூறினார்.