செய்தியாளர்: பா. சீனிவாசன், வந்தவாசி.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த அனக்காவூர் ஒன்றியம், மேல்நெமிலி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் உலக வாய் சுகாதார தின விழிப்புணர்வு நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வில் வட்டார மருத்துவ அலுவலர் மருத்துவர் கோகுல் நாத் வழிகாட்டுதலின்படி, பல் மருத்துவர் செந்தில் குமார் பங்கேற்று, பள்ளி மாணவர்களுக்கு பல் பரிசோதனை செய்து, பல் ஆரேக்கியம் குறித்த விழிப்புணர்வை வழங்கினார்.
மேலும் பல் ஆரேக்கியம் பற்றிய விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி மற்றும் வினாடி வினா வினா போட்டிகள் நடத்தப்பட்டு மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் பங்கேற்ற அனைவருக்கும் பற்பசையும் வழங்கப்பட்டன. இதில் பள்ளி தலைமை ஆசிரியை இரா.தேன்மொழி, ஆர்பிஎஸ்கே மருத்துவர் மாலினி, சுகாதார ஆய்வாளர் செல்வம் மற்றும் மருத்துவ குழுவினர் பங்கேற்று விழாவை சிறப்பாக நடத்தினர்.