திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி முத்தமிழ் சமூக நீதிப் பேரவை சார்பில் தெள்ளாறு அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் +2 தேர்வில் 516 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்த மாற்றுத் திறனாளி மாணவன் ச.பத்ரிநாத்க்கு ரூ1000/- வழங்கி வாழ்த்துக்கள் கூறப்பட்டது.
நிகழ்ச்சியில் பேசிய வந்தவாசி நகர மன்ற துணைத் தலைவரும், முத்தமிழ் சமூக நீதிப் பேரவையின் தலைவருமான அன்னை க.சீனிவாசன் மாணவனின் உயர் கல்விக்கு என்றும் துணை நிற்போம் என பாராட்டினர்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் பள்ளி பொறுப்பு தலைமை ஆசிரியர் எத்திராஜ், ஜோதி நிதி உதவிப் பள்ளி தலைமை ஆசிரியர் பழ.சீனிவாசன். கவிஞர்கள் பூங்குயில் சிவகுமார், வை.தங்கராசு, வீனஸ் வித்யாலயா பள்ளி தாளாளர் ரமேஷ் கண்ணா, தெள்ளாறு சிவராமகிருஷ்ணன், எம்.விநாயமூர்த்தி, மோகன் மற்றும் சர்புதீன் ஆகியோர் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினர்.
முன்னதாக தலைமை ஆசிரியர் எத்திராஜன் அனைவரையும் வரவேற்றார். முடிவில் முதுகலை தமிழாசிரியர் முனைவர் ம.மகாலட்மி நன்றி கூறினார்.
செய்தியாளர்: பா. சீனிவாசன், வந்தவாசி.