மயிலாடுதுறை செப்தியாளர்
இரா.மோகன்

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தில் புகழ்பெற்ற பட்டணப் பிரவேசம் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஞானபுரீஸ்வரர் திருத்தேரோட்டம். தருமபுரம் ஆதீனம் உள்ளிட்டோர் திரளான பக்தர்கள் தேரினை வடம் பிடித்து இழுத்து வழிபாடு :-
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையை அருகே தருமபுரத்தில் 16-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தருமபுரம் ஆதீனத் திருமடம் அமைந்துள்ளது. சைவத்தையும், இங்கு 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ ஞானாம்பிகை சமேத ஞானபுரீஸ்வரர் சுவாமி ஆலயத்தில் பத்து நாட்கள் நடைபெறும் வைகாசி பெருவிழா கடந்த 09-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம்வெகு விமர்சையாக நடைபெற்றது.ஸ்ரீ ஞானாம்பிகை சமேத ஞானபுரீஸ்வரர் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினர்.தொடர்ந்து மகாதீபாராதனைக்குப் பின்னர் யானை,குதிரை, ஆடு,மாடு உள்ளிட்ட மங்கல சின்னங்கள் முன் செல்ல கைலாய வாத்தியம் மற்றும் மேள தாளங்கள் முழங்க திருத்தேரோட்டம் நடைபெற்றது.
தருமபுரம் ஆதினம் 27-வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் தேரை வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்து வழிபாடு மேற்கொண்டார். அதனை தொடர்ந்து திரளான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
தேர் ஆதீன திருமடத்தின் நான்கு வீதிகளும் சுற்றி வந்து நிலையை அடைந்தது.விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றாக நாளை காலை, முந்தைய ஆதீனங்களின் ஐக்கிய கோயில்களான குருமூர்த்தங்களுக்கு தற்போதைய ஆதினம் நாற்காலி பல்லக்கில் எழுந்தருளும் நிகழ்ச்சியும் , நாளை மறுதினம் 19 ஆம் தேதி பிரசித்திபெற்ற ஆதீனத்தை பக்தர்கள் சிவிகைப் பல்லக்கில் அமர்த்தி தூக்கிச் செல்லும் பட்டணப் பிரவேசமும் நடைபெற உள்ளது.