மயிலாடுதுறை செய்தியாளர் இரா.மோகன்

மயிலாடுதுறை அருகே குத்தாலத்தில் அறநிலையத்துறை உதவி ஆணையரை கண்டித்து தமிழ்நாடு அடிமனை பயனாளிகள், குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்: 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு:-

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பேரூராட்சியில் செயல்பட்டு வரும் தனியார் இனிப்பகத்தை கடந்த 15 ஆம் தேதி வருவாய் துறை, காவல் துறை அனுமதி இன்றி இந்து சமய அறநிலையத்துறை தன்னிச்சையாக செயல்பட்டு ஆக்கிரமிப்பு அகற்றம் என்ற பெயரில் ரவுடிகளை கொண்டு வணிகர்கள், பொது மக்களை தாக்கியதாக குற்றம் சாட்டி இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ராணியை கண்டித்து குத்தாலம் கடைவீதியில் தமிழ்நாடு அடிமனை பயனாளிகள் குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

நேற்று முன்தினம் அந்த இனிப்பகத்தை ஆக்கிரமிப்பு அகற்றம் செய்ய இந்து சமய அறநிலையத்துறையினர் முற்பட்டபோது இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாகி நாற்காலிகளைக் கொண்டு தாக்கிக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் குத்தாலம் கடைவீதியில் சங்கத்தின் மாநில செயலாளர் சாமி.நடராஜன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சங்க நிர்வாகிகள், வணிகர்கள் உட்பட 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ராணியை கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

Share this to your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *