தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
கார்த்தி சிதம்பரம் எம்.பி. பேட்டி:
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தமிழகத்தைப் பொறுத்தவரையில் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிவாய்ப்பு இந்தியா கூட்டணிக்குத்தான் உள்ளது என்று சிவகங்கை மக்களவைத் தொகுதி உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
தாராபுரத்தில் உள்ள திருப்பூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நிர்வாகிகளுடன் சிதம்பரம் மக்களவைத் தொகுதி உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் ஆலோசனை நடத்தினர்.
இதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் திமுக கூட்டணிக்கு புதிய கட்சிகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. தற்போது உள்ள அரசியல் கட்சிகள் யாரும் விலகமாட்டார்கள். காங்கிரஸ் கட்சி மட்டுமல்ல தேசியக்கட்சிகள் அனைத்திலும் மாநிலத் தலைவர் பதவி என்பது நியமனப் பதவியாகும். காங்கிரஸ் கட்சியில் தேர்தல் நடத்தியோ அல்லது ஒட்டுமொத்த தொண்டர்களின் கருத்தைக் கேட்டோ நியமிப்பது கிடையாது.
யாரை நியமித்தால் கட்சிக்கு நல்லது என்று முடிவு எடுக்கும் இடத்தில் தலைமை உள்ளது. காங்கிரஸ் தலைமை யாரை நியமிக்கிறதோ அவர்தான் 3 ஆண்டுகள் தலைவர். அதே வேளையில், கட்சித் தலைமையாக மாநிலத் தலைவர் பதவியைக் கொடுத்தால் ஏற்றுக்கொள்வேன். ஆனால் அதற்காக விண்ணப்பிக்கும் எண்ணம் இல்லை. தொகுதிக்குள் மட்டுமே முடங்கியிருந்தால் நாட்டு நடப்பு, மக்களின் மனநிலை, கட்சியின் நிலை எல்லாம் தெரியாது.
ஆகவே, தொகுதியை விட்டு வெளியே வந்து நண்பர்களைப் பார்த்து கட்சியின் நிலைமை, வரும் தேர்தலில் இந்தப் பகுதியில் நமக்கு வாய்ப்பு எப்படி என்பதைக் கேட்டறிய வந்துள்ளேன்.
இந்திய கூட்டணியில் இருந்து எந்தக் கட்சியும் வெளியே செல்ல வாய்ப்பு இல்லை. தமிழகத்தில் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் இந்தியா கூட்டணிக்குத்தான் வெற்றி வாய்ப்பு உள்ளது.
பாகிஸ்தான் பிரச்னையில் அனைத்து யுக்திகளையும் நாம் கையாள வேண்டும். ராணவ ரீதியான யுக்தியுகள், ராஜாங்கரீதியான யுக்திகள், மற்ற நாடுகளிடம் அவர்களது பிரச்னைகளை எடுத்துச்சொல்வது, சிந்துநதி நீரை நிறுத்துவது உள்ளிட்ட அனைத்து யுக்திகளையும் கையாள வேண்டும் என்பது என்னைப் பொருத்தவரையில் நியாயமானதாகும். பாகிஸ்தானின் ஆதரவு இல்லாமல் பயங்கரவாதிகள் இந்தியாவில் தாக்குதல் நடத்துகின்றனர்.
ஆகவே, இந்த செயலை தடுத்து நிறுத்த வேண்டியது பாகிஸ்தானின் கடமையாகும்.பஹல்காம் தாக்குதல் குறித்தும்,சம்பவம் நிகழ்ந்த இடத்தில் ராணுவ வீரர்கள் இல்லாதது குறித்தும், எல்லைதாண்டி வந்த 4 பயங்கரவாதிகள் வந்தது குறித்தும், இதன் பின்னர் எடுத்த நடவடிக்கைகளால் ஏற்பட்ட நன்மைகள் குறித்தும், அடுத்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் நாடாளுமன்றத்தைக்கூட்டி பிரதமரும், ராணுவ அமைச்சரும் விளக்கம் அளிக்க வேண்டும் என்றார்.
அதன் பின்னர் தாராபுரத்தில் நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த காடு அனுமந்த ராயர் சாமி திருக்கோவிலுக்கு சென்ற கார்த்திக் சிதம்பரம் நடைபெற்றுள்ள கட்டுமான பணிகள் குறித்து அர்ச்சகர் இடம் கேட்டு அறிந்தார் அதன் பிறகு காடு அனுமந்தராயர் சாமிக்கு சிறப்பு தரிசனம் செய்து அதன் பிறகு சாமி தரிசனம் செய்தார் அப்போது
காங்கிரஸ் திருப்பூர் தெற்கு மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் தென்னரசு, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் காளிமுத்து, மகிளா காங்கிரஸ் பொதுச் செயலாளர் மாலதி, கலைப்பிரிவு துணைத்தலைவர் கலாராணி உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.