தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக அறிவியல் புல சித்த மருத்துவத்துறை சார்பில் “இந்திய அறிவுசார் அமைப்பியல் வரலாற்றில் தமிழ் மருத்துவத் தடயங்கள் என்ற தலைப்பில் சிறப்புச் சொற்பொழிவு வெகு விமர்சையாக நடைபெற்றது.
விழாவில் துணைவேந்தர் பொறுப்பு குழு உறுப்பினர்கள்,மரு. முனைவர்,பெ. பாரதஜோதி , முனைவர்.சி. அமுதா ஆகியோர் தலைமை தாங்கினார்.
பதிவாளர் பொறுப்பு கோ.பன்னீர்செல்வம் வாழ்த்துரை ஆற்றினார்.
தொடர்ந்து வாழ்த்துரை வழங்கிய மொழிபெயர்ப்புத்துறை இணைப்
பேராசிரியர், முனை. சௌ.வீரலக்ஷ்மி கூறியதாவது தமிழ் மருத்துவ தொன்மையைப் பற்றியும் ‘சுளுந்தீ’ நாவல் குறித்தும் அதில் கூறப்பட்டுள்ள. பண்டுவ முறைகள் குறித்தும் மாணவ மாணவிகளுக்கு விரிவாக எடுத்துரைத்தார்.
தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் ஆட்சிக்குழு உறுப்பினர், பேரா. முனை.ரெ. நீலகண்டன் இந்திய அறிவுசார் அமைப்பியலின் வரலாறு மற்றும் கருத்தாக்கம் குறித்துத் தலைமை உரையாற்றினார்.
சிறப்பு விருந்தினராக திருச்சி,புனித சிலுவை கல்லூரி, ,வரலாற்றுத்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் .செ. ப. தர்சனா , கூறியதாவது இந்திய அறிவுசார் அமைப்பியல் அறிமுகம் மற்றும் வரலாற்றில் தமிழ் மருத்துவத் தடயங்கள் எனும் பொருண்மையில் பழைய கற்கால ஆதாரங்கள், மண்டையோட்டில் துளைகள் இட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதற்கான அகழ்வாராய்ச்சி தரவுகள், மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும், இடமளிக்கப்பட்ட செய்தி மற்றும் மருத்துவம் பார்க்கப்பட்ட ஆதூரசாலைகள் குறித்த திருமுக்கூடல் கல்வெட்டுகள், உணவு மற்றும் நலம் குறித்த இலக்கிய தரவுகள் அடங்கிய செறிவான பொழிவுரை வழங்கினார்.
முன்னதாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் மரு.து.மாண்டெலா வரவேற்று பேசியதாவது: இந்திய அறிவுசார் அமைப்பியலில் தமிழ் நிலப்பரப்பின் அறிவியல் முன்னெடுப்புகள் தமிழ் மருத்துவத்தின் நிலை, மருந்து மற்றும் அழகுசாதானப் பொருட்கள் சட்டத்தில் தமிழ் மருத்துவ நூல்கள் அங்கீகரிப்பில் இன்றைய போக்கு மற்றும் தமிழ் மொழியைக் காத்து வளர்த்தலில் தமிழ் மருத்துவர்கள், தமிழறிஞர்கள், வரலாற்றாய்
வாளர்களின் பணி குறித்தும் கூறினார். நிறைவில் சித்த மருத்துவத்துறை உதவிப் பேராசிரியர் மரு.முனை.பழ. பாலசுப்பிரமணியன் நன்றி கூறினார் .
நிகழ்ச்சியில் இலக்கியம், கடல்சார் வரலாறு மற்றும் கடல்சார் தொல்லியல், சிற்பத்துறை , கணினி அறிவியல் துறை, கல்வெட்டியல், தொல்லியல்துறை சார்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்