கோவை துடியலூரில் லம்போதரா ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் ஆர்க்கிட் ஆர்னா எனும் புதிய அபார்ட்மென்ட் அறிமுகம்
ரியல் எஸ்டேட் துறையில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெற்று முன்னணியில் உள்ள லம்போதரா ரியல் எஸ்டேட் நிறுவனம் கோவை துடியலூரில் ஆர்க்கிட் ஆர்னா தனது புதிய அடுக்குமாடி குடியிருப்பு விற்பனை திட்டத்தை துவக்கி உள்ளது..
2 மற்றும் 3 படுக்கை அறைகள் கொண்ட இந்த அடுக்குமாடி குடியிருப்பிற்கான கட்டுமான பணிகள் மற்றும் அறிமுக விழா லம்போதரா ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் இயக்குனர்கள் நவரத்தின வேலு மற்றும் மாணிக்கம் தலைமையில் நடைபெற்றது..
விழாவில் சிறப்பு விருந்தினராக மாதம்பட்டி நிறுவனங்களின் தலைவரும், பிரபல சமையல் கலை நிபுணரும் மற்றும் திரைப்பட நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் கலந்து கொண்டு இந்த புதிய புராஜெக்ட்டினை அறிமுகம் செய்து வைத்தார்..
முன்னதாக அவர் ஆர்கிட் ஆர்ணா அலுவலகத்தை திறந்து வைத்தார்..
தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் கவுரவ விருந்தினர்களாக பாரத ஸ்டேட் வங்கியின் மண்டல மேலாளர் ரங்கநாதன் ,தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகத்தின் முன்னால் துணைவேந்தர் முனைவர் கீதாலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்..
மேட்டுப்பாளையம் சாலையில் இருந்து 150 மீட்டரில் வி.ஜி.மருத்துவமனைக்கு எதிரில் துவங்கி உள்ள ஆர்க்கிட் ஆர்னா அபார்ட்மென்ட். அறிமுக விழா சலுகையாக ஒரு சதுரடி ரூ.6,500/- என்ற சிறப்பு விலையில் விற்பனை செய்யப்படுகிறது. முன்னணி கல்லூரிகள், பள்ளிகள், மருத்துவமனைகள், உணவகங்கள் மற்றும் ஷாப்பிங் சென்ட்டர்கள் ஆகியவற்றுக்கு அருகாமையில் அமைந்திருப்பது இதன் தனிச்சிறப்பாகும்.
நவீன உடற்பயிற்சி கூடம், கம்யூனிட்டி ஹால், இன்டோர் கேம்ஸ், குழந்தைகள் விளையாட்டுப் பகுதி, கிளப் ஹவுஸ், ஆட்டோமேட்டிக் லிஃப்ட், சாஃப்ட்னர் பிளான்ட், சி. சி. டி. வி பாதுகாப்பு, நுழைவாயிலில் பயோமெட்ரிக் கன்ட்ரோல் மற்றும் குழாய் வழியிலான எரிவாயு அமைப்பு உள்ளிட்ட அனைத்து வசதிகளுடனும் அமைக்கப்படுவதாகவும் லம்போதரா நிறுவன இயக்குனர்கள் தெரிவித்தனர்..