நாகையில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற தமிழ் நம் உயிர் மூச்சு இலக்கியச் சுற்றம் அமைப்பின் சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு தொகுப்பு நூல் வெளியீடு விழாவை முன்னிட்டு தமிழில் பெயர் பலகை அமைக்க பேரணி
நாகை பழைய பேருந்து நிலையத்தில் தமிழ் நம் உயிர் மூச்சு இலக்கிய சுற்றம் அமைப்பின் சார்பில் அனைத்து வணிக நிறுவனங்களிலும் தூய தமிழில் பெயர் பலகை வைக்க வலியுறுத்தி இன்று பேரணி நடைபெற்றது.
பேரணியில் தூய தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டி கோஷங்கள் எழுப்பப்பட்டன நாகை பழைய பஸ் நிலையத்திலிருந்து துவங்கிய பேரணி தனியார் திருமண மண்டபத்தில் நிறைவுற்றது மேலும் மண்டபத்தில் குத்துவிளக்கேற்றி குழந்தைகளின் பரதநாட்டியங்கள் நூல் வெளியீட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது
இந்நிகழ்வில் தமிழ் சங்க தலைவர் ஆவராணி ஆனந்தன் தலைமை தாங்கினார். இதில் இலக்கிய சுற்றம் அமைப்பின் நிறுவனர்கள் குணசேகரன், பிரபாகரன் கவிஞர் வெற்றி பேரொளி உள்ளிட்ட நூற்றுக்கணக்கான தமிழ் ஆர்வலர்கள் பேரணியில் பங்கேற்றனர்.
நாகப்பட்டினம் மாவட்ட செய்தியாளர் ஜி. சக்கரவர்த்தி