மயிலாடுதுறை செய்தியாளர் இரா.மோகன்
மயிலாடுதுறை மாவட்டம் திமுக இளைஞரணி சார்பாக மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சட்டமன்றத் தொகுதி குத்தாலம் மேற்கு ஒன்றியம் பரமசிவபுரத்தில் மயிலாடுதுறை மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் பாஜக ஒன்றிய அரசை கண்டித்து மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
மாவட்ட செயலாளர் நிவேதா எம் முருகன் எம்எல்ஏ தலைமையில் இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர் மருது, குத்தாலம் மேற்கு ஒன்றிய செயலாளர் ராஜா முன்னிலையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக திமுக பேச்சாளர் நாஞ்சில் சம்பத் , மாநில இளைஞரணி துணை செயலாளர் இளையராஜா மற்றும் இளம் கழக பேச்சாளர் அன்ட்ரோ வளர்பிரைட்டன் கலந்து கொண்டு பேசினர்.
அப்போது பாஜக அரசு இந்தி திணிப்பு நிதி பகிர்வில் பாரபட்சம்,தொகுதி மறுசீரமைப்பில் அநீதி இழைப்பதாக கூறினார்.மேலும் தமிழ்நாடு இளைஞர்களின் எதிர்காலமாக உதயநிதி ஸ்டாலின் திகழ்வார் என்றும் கூறினார்.
அப்போது குத்தாலம் மேற்கு ஒன்றியத்தை சேர்ந்த அதிமுக மற்றும் மாற்றுக் கட்சியினர் தங்களை திமுக இணைத்துக் கொண்டனர். கூட்டத்தில் மயிலாடுதுறை மாவட்ட நகர ஒன்றிய பெருங் கழக நிர்வாகிகள் இளைஞரணி துணை அமைப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமான கலந்து கொண்டனர்.