மதுரையில் மின் ஊழியர்கள் போராட்டம் மின் வாரியத்தில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி தர்ணா போராட்டம் நடந்தது.
மதுரை ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு நடந்த போராட்டத்திற்கு மாநில துணை தலைவர் ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார். இந்த போராட்டத்தில், ஏராளமான ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய கோரியும், மின்சார வாரியத்தில் உள்ள காலிபணியிடங்களை உடனே நிரப்ப கோரியும், மின் வாரியத்தை தனியார் மயமாக்க எதிர்ப்பு தெரிவித்தும் கோஷங்களை எழுப்பினர். மண்டல செயலாளர் உமாநாத் நன்றி கூறினார்.