பாபநாசத்தில் ரோட்டரி சங்கம் சார்பில் முப்பெரும் விழா….

முன்னாள் ரோட்டரி சங்க மாவட்ட ஆளுநர் பங்கேற்பு தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் ரோட்டரி சங்கம் சார்பில் பட்டைய நாள் விழா, தலைவர் செயலாளர் வழி அனுப்பு விழா, சிறப்பு வாராந்திர கூட்டம் உள்ளிட்ட முப்பெரும் விழா ரோட்டில் சங்க தலைவர் சக்திவேல் தலைமையில் நடைபெற்றது.
இவ்விழாவில் ரோட்டரி சங்கம் முன்னாள் மாவட்ட ஆளுநர் பாலாஜி பாபு கலந்து கொண்டு சிறப்பாக செயல்பட்ட தலைவர் செயலாளர்களுக்கு பட்டையங்கள் வழங்கி சிறப்புரை ஆற்றினார்.
நிகழ்ச்சியில் உதவி ஆளுநர்கள் அறிவழகன், பக்ருதீன் அலி அகமது, சரவணன்,
செந்தில் நாதன், ராமநாதன், ரவிச்சந்திரன் மற்றும் முன்னாள் தலைவர்கள் செயலாளர்கள் சங்க உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.