தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளிக்கு தேவகோட்டை மருத்துவர் ரூபாய் 10,000 மதிப்பிலான புத்தகங்களை வழங்கி ஆச்சரியத்தில் அசத்தினார்.
தேவகோட்டை செந்தில் மருத்துவமனை இயக்குனர் மருத்துவர் சிவகுமார் பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் வசம் பள்ளி நூலகத்துக்கு புத்தகங்களை பரிசாக வழங்கி பேசுகையில், “மாணவர்கள் இளம் வயதில் இருந்தே வாசிப்பை பழக்கமாக்க வேண்டும்.இந்த வயதில் புத்தகங்கள் வாசிக்க பழகி கொண்டால் பிற்காலம் நன்றாக அமையும்.. புத்தகங்கள் தன்னம்பிக்கை , தைரியத்தை வழங்கவல்லவை. சமூகத்தை பற்றிய சிந்தனையை உருவாக்கும். நல்ல புத்தகங்களைத் தேர்ந்தெடுத்து வாசித்தால் , வாழ்வில் வெற்றியாளராக திகழலாம்” வாழ்த்துகள் என்றார்.நிகழ்வில் பள்ளி ஆசிரியர் ஸ்ரீதர், ஆசிரியை முத்துமீனாள் உட்பட பலர் பங்கேற்றனர்.

Share this to your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *