பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன்
பாபநாசம் அருகே பட்டுக்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவர் சேர்க்கை பேரணி …..
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஒன்றியம் பட்டுக்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவர் சேர்க்கை பேரணி நடைபெற்றது கோவிந்தநாட்டு சேரி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஜெய்சங்கர் தலைமை வகித்து பேரணியை துவக்கி வைத்தார் ஐந்து வயது முடிவடைந்த குழந்தைகள் அனைவரையும் சேர்க்கும் பொருட்டும். அரசு பள்ளிகளில் வழங்கப்படும் சலுகைகள் குறித்து பொதுமக்கள் மற்றும் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் மாணவர் சேர்க்கை பேரணி நடத்தப்பட்டது பேரணியில் பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயந்தி ஆசிரியர்கள் சங்கீதா சுகுணா பள்ளி மேலாண்மை குழு தலைவர் ஜோதிமணி மற்றும் உறுப்பினர்கள் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர் .