புதுச்சேரி சுகாதார துறையில் பணிபுரியும் nhm ஊழியர்கள் பணி நிரந்தரம் மற்றும் சம்பள உயர்வு வழங்க வலியுறுத்தி இயக்குனர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்
புதுச்சேரி சுகாதாரத் துறையில் 20 ஆண்டுகளுக்கு மேலாக அனைத்து அரசு மருத்துவமனை,மகப்பேறு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பல்வேறு கட்டங்களில் பல்வேறு பொறுப்புகளில் திறம்பட பணி புரிந்து வருகிறார்கள், இவர்களுக்கு மிகக் குறைந்த அளவே ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. எனவே ஊழியர்களை பணி நிரந்தரம் செய்து ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்று பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
மேலும் மத்திய அரசு என்.எச்.எம். ஊழியர்களை பணி நிரந்தரம் செய்து ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்று புதுச்சேரி அரசுக்கு பலமுறை கடிதம் அனுப்பியும் உள்ளது. ஆனால் அரசும் அதன் மீது எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்த நிலையில் பணி நிரந்தரம் மற்றும் ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என வலியுறுத்தி பணியை புறக்கணித்த nhm ஊழியர்கள் சுகாதாரத்துறை இயக்குனர் அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.
இந்த போராட்டத்திற்கு புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் ஆதரவு தெரிவிக்கப்பட்டது கட்சி சார்பில் காங்கிரஸ் நிர்வாகி சூசைராஜ் கலந்துகொண்டு ஊழியர்களுக்கு ஆதரவு தெரிவித்தார்.