பால் உற்பத்தியாளர் சங்க உறுப்பினர்கள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கச் செயலாளர்கள் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்களுடனான கலந்தாய்வுக் கூட்டத்தில் பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் அறிவுறுத்தல்;-

மயிலாடுதுறை மாவட்ட அட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்க செயலாளர்கள் மற்றும் அனைத்து இணைத்துறை அலுவலர்களுடனான கலந்தாய்வுக்கூட்டம் நடைபெற்றது.
பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் தலைமை வகித்து பால் உற்வத்தியாளர்கள் சங்க பொறுப்பாளர்கள், கூட்டுறவுத்துறை அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தி மயிலாடுதுறை மாவட்டத்தில் பால் உற்பத்தி அதிகரிப்பிற்காக மேற்கொள்ளப்பட்டுவரும் திட்டங்கள், செயல்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
தொடர்ந்து 27 தொடக்க கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கங்களுக்கு 47 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர் அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறுகையில் மயிலாடுதுறை மாவட்டம் விவசாயிகளில் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் ஒரு முக்கிய அங்கம் வகிக்கிறது.
ஆவின் ஒரு பொதுத்துறை நிறுவனம். இதில் லாபத்தை ஏற்படுத்தினால்தான் ஏழை விவசாயிகளின் பொருளாதாரத்தை மேம்படுத்த முடியும். பால் உற்பத்தியாளர் சங்க உறுப்பினர்கள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். பால்வளத்துறையை மேம்படுத்த தமிழக முதல்வர் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறார்.
முழுமையான விவசாயிகள் நிறைந்த இந்த மாவட்டத்தில் கால்நடை வளர்ப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டிய சூழல் உள்ளது. அதிகமான கறவை மாடு வளர்ப்பு தேவைப்படுகிறது. கறவை மாடுகள் வாங்க கடனுதவிகள் வழங்க ஆட்சியர் மூலம் இங்குள்ள வங்கிகளுக்கும், கூட்டுறவு கடன் சங்கங்களுக்கும் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது. அரசு மானியத்துடன் கூடிய கடன் வசதி வழங்கி சிறிய தொழில்முனைவோரை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். குறைந்தது 3 ஆயிரம் லிட்டர் பால் உற்பத்தி செய்யப்படும் பகுதிகளில் பால் குளிருட்டும் நிலையங்கள் அமைத்துகொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இ.தில் எம்.பி.சுதா, மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த், பால்பண்ணை மேம்பாட்டுத்துறை ஆணையர் அண்ணாதுரை, எம்.எல்.ஏ.க்கள் நிவேதாமுருகன், ராஜ்குமார், பன்னீர்செல்வம் உட்பட அனைத்துத்துறை அதிகாரிகள், அலுவலர்கள் கலந்துகொண்டனர்.