தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் வாகன பேரணி
தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் மே 18 முள்ளிவாய்க்கால் இனபடு கொலைக்கு நீதிகோரி கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை மொழிபோர் தியாகிகள் நினைவு ஸ்தூபியில் இருந்து இருசக்கர வாகன பேரணி தெடங்கியது.
இந்த இரு சக்கர வாகன பேரணி தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான தி.வேல்முருகன் அவர்கள் அறிவுறுத்தலின்பேரில் மாநில இளைஞரணி செயலாளர் புலேந்திரன் முருகானந்தம் ஒருங்கிணைப்பில் நடைபெறுகிறது.
இந்த இரு சக்கர வாகன பேரணி தொடக்க நிகழ்ச்சிக்கு தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாநில துணை தலைவர் சோ.சுரேஷ் மற்றும் கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி அமைப்பாளர் பிரனேஷ்குமார் ஆகியோர் தலைமை தாங்கினர். கிள்ளியூர் தொகுதி நிர்வாகி ஜார்ஜ் அமல்ராஜ் வரவேற்புரையாற்றினார்.
நாகர் சட்டமன்ற தொகுதி அமைப்பாளர் நாகராஜன், கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி அமைப்பாளர் தமிழ் செல்வன், விளவங்கோடு சட்டயன்ற தொகுதி அமைப்பாளர் ரூபின் ஆன்டனி ஆகியோர் முன்னிலை வகுத்தனர். இந்த பேரணியை மாநில நிர்வாகி வெற்றிகுமரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
சிறப்பு விருந்தினர்களாக புதுக்கோட்டை தனசேகரன், வழக்கறிஞர் அனிட்டர் ஆல்வின் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் இந்நிகழ்ச்சியில் கிள்ளியூர் தொகுதி பொறுப்பாளர்கள் பாபு, ஜெபின் , மணிகண்டன், தங்கமணி, பிராங்க், ராஜன், கன்னியாகுமரி தொகுதி பொறுப்பாளர் ஜெயபால் , விளவங்கோடு தொகுதி பொறுப்பாளர் மோகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்த இருசக்கர வாகன பேரணி களியக்காவிளை மார்த்தாண்டம் தக்கலை நாகர்கோவில் வழியாக நெல்லை சென்றது. இந்த இருசக்கர வாகன பேரணி மே 18 ம்தியதி செஞ்சி கோட்டையை சென்றடைகிறது.