எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி
சீர்காழி அருகே மீனவ கிராமங்களில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு கிரிடம்,மாலை அணிவித்த தமிழக வெற்றிக்கழகத்தினர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த திருமுல்லைவாசல் முதல் பழையார் கிராமம் வரை உள்ள மீனவ கிராமங்களில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மீனவ கிராம மாணவர்களுக்கு தமிழக வெற்றிக்கழகத்தினர் வாழ்த்து தெரிவித்து மரியாதை செய்தனர்.
மாவட்ட மீனவரணி அமைப்பாளர் விஜய் தலைமையில் மடவாமேடு மீனவ கிராமத்தில் நடைபெற்ற பனிரெண்டாம் வகுப்பு பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற பத்து மீனவ கிராமங்களை சேர்ந்த மாணவர்களை அழைத்து வந்து மடவாமேட்டில் அவர்களை கௌவுரவ படுத்தும் விதமாக மாணவர்களுக்கு கிரிடம் வைத்து மலர் மாலை அணித்து வாழ்த்துகளை தெரிவித்தனர்.அதனை தொடர்ந்து வெயிலின் தாக்கத்தை தணிக்க நீர் மோர் பந்தலை திறந்து
வைத்து பொதுமக்களுக்கு சர்பத்,மோர்,தர்பூசணி பழங்களை வழங்கினர். இதில் தமிழர் வெற்றி கழகத்தின் மீனவரணி, இளைஞர் அணி, தொண்டர் அணி சீர்காழி,கொள்ளிடம் ஒன்றிய தலைவர்கள்,நிர்வாகிகள்,ஊர்தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.