கும்பகோணத்தில் களைகட்டிய சலங்கை நாதம் கலை விழா”
தஞ்சாவூர் தென்னக பண்பாட்டு மையம்,கும்பகோணம் வாணி விலாச சபா, ஆகிய இணைந்து நடத்தும் தென் மாநில வட மாநில சலங்கை நாதம் கலை விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக சபா செயலாளர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சு. கல்யாணசுந்தரம் பங்கேற்று துவக்கி வைத்தார்.சபா தலைவரும்,கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் க.அன்பழகன் தலைமை தாங்கினார்.முன்னதாக மாநகர துணி மேயர் சுப தமிழழகன் வரவேற்றார்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு, கேரளா, பஞ்சாப், சிக்கம்,அருணாச்சலப் பிரதேசம்,ஆகிய மாநிலங்களை சேர்ந்த 250க்கும் மேற்பட்ட கலைஞர்கள் கலந்துகொண்டு தங்களது பாரம்பரிய கலைகளை வெளிப்படுத்தினர்.
“
பெண்கள் மற்றும் ஆண்கள் அழகிய கலை நயத்துடன் நடமாடிய காட்சி பார்வையாளர்களை கவர்ந்தது. மேலும், வாணி விலாச சபா கூடுதல் தலைவர்,துணைத் தலைவர்,பொருளாளர் மற்றும் உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு கண்டு களித்தனர்