கோவை மாநகராட்சி 7 வது வார்டு காளப்பட்டி பெரியார் நகர் பகுதியில் பூங்கா மேம்பாட்டு திட்டத்தில் மரக்கன்றுகள் நடும் பணிகள் துவக்கம்
கோவை மாநகராட்சி 6 மற்றும் 7 வது வார்டுக்கு உட்பட்ட காளப்பட்டி நேரு நகர்,பெரியார் நகர் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பல இலட்சம் மதிப்பிலான இடம் தனியார் ஆக்ரமிப்பில் இருந்து வந்தது…
இந்நிலையில்,காளப்பட்டி பெரியார் நகர் குடியிருப்போர் நல அமைப்பினர் அளித்த புகார் மனு அடிப்படையில் அந்த நிலம் மீட்கப்பட்டது..
இந்நிலையில் தற்போது பூங்கா மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மீட்கப்பட்ட இடத்தில் நடை பயண பூங்கா அமைக்கும் வகையில் முதல் கட்டமாக மரக்கன்றுகள் நடும் பணி துவங்கப்பட்டது..
பெரியார் நகர் குடியிருப்போர் நல அமைப்பினர் ஒருங்கிணைத்த இதற்கான நிகழ்ச்சியில் மாநகராட்சி 7 வது வார்டு மாமன்ற உறுப்பினர் கோவிந்தராஜ்,6 வது வார்டு உறுப்பினர் பொன்னுசாமி ஆகியோர் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்…
இந்நிகழ்ச்சியில் 7 வது வார்டு மாநகராட்சி பொறியாளர் குமார்,காளப்பட்டி பெரியார் நகர் குடியிருப்போர் நல அமைப்பு நிர்வாகிகள் ராஜேந்திரன்,சண்முக சுந்தரம்,தேவராஜ்,சுந்தரம்,மற்றும் வாமணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.