கரூர் செய்தியாளர் மரியான் பாபு
காவலர்களுக்கு நீர் மோர் வழங்கும் நிகழ்ச்சி கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துவக்கி வைத்தார்..கரூர் மாவட்டத்தில் கோடைகாலம் தொடங்குவதை முன்னிட்டு கடும் வெயிலிலும் போக்குவரத்தை சரிசெய்வதற்காக போக்குவரத்து காவல் மற்றும் காவல்துறையில் துறையினர் பணியாற்றிவரும் காவலர்களுக்கு பணிச்சுமையை தவிர்க்கும் வகையிலும், வெயிலில் இருந்து தற்காத்து கொள்ளவும்,
கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா அருகில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கா.பெரோஸ்கான் அப்துல்லா IPS., கலந்து கொண்டு துவக்கி வைத்தார். தொடர்ந்து போக்குவரத்து காவலர்களுக்கு தொப்பி, கருப்பு கண்ணாடி, மற்றும் மோர், பழச்சாறு வழங்கினார். இந்நிகழ்வில் கரூர் லயன்ஸ் கிளப் பொறுப்பாளர்கள், காவல் துணைக் கண்காணிப்பாளர் செல்வராஜ், மற்றும் போக்குவரத்து காவல் ஆய்வாளர்கள் சாஹிராபானு, நந்தகோபால் மற்றும் கரூர் நகர காவல் நிலைய ஆய்வாளர்
மணிவண்ணன், கரூர் நகர காவல் நிலைய உதவி ஆய்வாளர் நாகராஜ் மற்றும் கரூர் நகரத்திற்கு உட்பட்ட காவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.