விருத்தாசலம்
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஆலடி சாலையில் அமைந்துள்ள நவாப் ஜாமியா மஸ்ஜித் பள்ளிவாசலில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முகமது முஸ்தபா தலைமை தாங்கினார்.
நகர திமுக செயலாளர் தண்டபாணி ஒன்றிய செயலாளர்கள் வேல்முருகன், கனக கோவிந்தசாமி, பாவாடை கோவிந்தசாமி, முன்னாள் எம்எல்ஏ கலைச் செல்வன் நகர வர்த்தகர்கள் சங்கத் தலைவர் கோபு முன்னிலை வகித்தனர். நகர மன்ற உறுப்பினர் அன்சார் அலி வரவேற்ப்பு ஆற்றினார்.
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வே. கணேசன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
அவர் பேசுகையில் இந்த நிகழ்வு என்பது ஒரு பிரசித்தி பெற்ற வரலாறு நிகழ்ச்சியாகும். சொர்க்கத்தின் வாசல் மட்டுமல்ல இந்த ரமலான் மாதத்தில் அருள் வாயில்களும் திறக்கப்படுவதாக நபிகள் நாயகம் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.
இந்த மாதத்தில் ஈடு இணையில்லா பாக்கியங்களை நமக்குத் தரும் என்பதில் வேறு கருத்துக்கள் இல்லை. இஸ்லாமிய சகோதரர்களும் நாமும் என்றென்றும் மதம், இனம், ஜாதி எல்லாவற்றையும் மறந்து சமூக நல்லிணக்கத்தோடு வாழ்வோம். இஸ்லாமிய சகோதரர்களுக்கு என்றும் துணையாக இருப்போம் என்றார்.
இதில் சிட்டி சம்சுதீன், சோழன் சம்சுதீன், அக்பர் அலி, மவுலான் சபியுல்லா இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட செயலாளர் சுக்கூர் ஸ்டார் பஸ் உரிமையாளர் உசேன், ஜாபர் சாதிக், கோல்டன் சேட்டு, சதத்துல்லா வர்த்தக சங்க செயலாளர் மணிவண்ணன் ஜாகிர் உசேன் தில்லை எலக்ரிக் தமிழ்வாணன், விஜய் டெக்ஸ் ரவிச்சந்திரன், கோடீஸ்வரன் சேம்பார் முபாரக் அலி, சாதிக், உமர் உசேன் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் வெங்கடேசன்,ஆதி திராவிடர் நலக்குழு அமைப்பாளர் ராமு ஒன்றிய செயலாளர் மணிவேல் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் பட்டி வசந்தகுமார் வழக்கறிஞர்கள் அருள்குமார், ரவிச்சந்திரன் மற்றும் அறிவுடை நம்பி நகரமன்ற உறுப்பினர்கள் தீபா மாரிமுத்து முத்துக்குமரன்,
கரி முன்னிஷா, சுந்தரமூர்த்தி, அருணா கோதண்டபாணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் நகரமன்ற உறுப்பினர் ஷகீலா ராஜா முகமது நன்றி கூறினார்.