வேதாரண்யத்தில் மின்சார ரயில் சோதனை ஓட்டம் நிறைவு
வேதாரண்யம் அடுத்த அகஸ்தியம்பள்ளி திருவாரூர் இடையிலான மின்மயமாக்கப்பட்ட அகல ரயில் பாதையில் 110 கி மீ வேகத்தில் மின்சார ரயில் சோதனை ஓட்டம் நிறைவடைந்தது. அகஸ்தியம்பள்ளியில் பூஜை செய்யப்பட்டு தெற்கு ரயில்வே முதன்மை மின் பொறியாளர் சோமேஷ் குமார் உள்ளிட்ட அதிகாரிகள் சோதனை ஓட்டத்தை தொடங்கி வைத்த நிலையில் சோதனை ரயில் திருவாரூர் ரயில் நிலையத்தை சென்றடைந்தது.