தாராபுரத்தில் விசிக.வினர் ஜே.ஜே. நகர் இடத்தில் பட்டா வழங்கிட வலியுறுத்தி வட்டாட்சியர் இடம் மனு கொடுத்தனர்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் வியாழக்கிழமை மதியம்
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருப்பூர் கிழக்கு முன்னாள் மாவட்ட செயலாளர் தமிழ் முத்து தலைமையில் 50-க்கும் மேற்பட்டோர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் திரவியத்திடம் மனு ஒன்று அளித்தனர் அந்த மனுவில் கூறியுள்ளதாவது:-
கொளத்துபாளையம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட ஜெ ஜெ நகர் பகுதியில்
கடந்த 1993 – 94 ம் ஆண்டு தாழ்த்தப்பட்ட அருந்ததியர் மக்களுக்கு ,
காங்கேயம் தனி வட்டாட்சியர் மூலமாக சுமார் 65 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது.
அதில் சுமார் 25 பயனாளிகள் அவ்விடத்தில் 10 ஆண்டுகளாக வீடுகள் கட்டிக் குடி இருக்காத காரணத்தினால், அந்த இடத்தில் வீடு இல்லாத தாழ்த்தப்பட்ட அருந்ததியர் சமுதாயத்தை சேர்ந்த சுமார் 25 நபர்கள் அவ்விடத்தில் வீடுகள் கட்டி சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக தனது குடும்பத்துடன் குடியிருந்து வருகிறார்கள் அதே போல நத்தம் காலி இடத்திலும் குடியிருந்து வருகிறார்கள்
இவர்களுக்கு, இவர்கள் குடியிருக்கும் இவ் வீட்டிற்கு தற்பொழுது குடியிருக்கும் இவர்களின் பெயரில் பட்டா வழங்கியும், பட்டா மாறுதல் செய்து வழங்கிட வேண்டும். என்றும்,கொளத்துப்பாளையம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட ஜே ஜே நகர் இடமானது கிராம கணக்கில் பட்டா மாறுதல் செய்யப்படாமல் உள்ளதாலும், நத்தம் காலியிடமாக உள்ளதாலும் ,20 ஆண்டுகளுக்கு மேலாக மேற்படி இடத்தில் குடியிருக்கும் அவரவர் பெயர்களுக்கு பட்டா வழங்கிட வேண்டும் எனவும், அல்லது இணைய வழிபட்டா வழங்கிட வலியுறுத்தியும் வட்டாட்சியர் அவர்களை கேட்டுக்கொள்கிறோம் என இவ்வாறு அந்த மனதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதில் 50 க்கு மேற்பட்ட இலவச பட்டா வழங்க வலியுறுத்தி வந்திருந்தனர்.