மதுரை சர்வேயர் காலனியில் டாக்டர். அனில்குமார் கண் மருத்துவமனை,
யாதவர் பண்பாட்டுக் கழகம் (டிரஸ்ட்), மதுரை காந்திமகன் அறக்கட்டளை,
ஆகியவை சார்பில் இலவச கண் பரிசோதனை மருத்துவ முகாம் நடைபெற்றது.
மருத்துவ முகாமில் காந்திமகன் அறக்கட்டளை நிறுவனர் ஏ.வெங்கடேசன் அனைவரையும் வரவேற்று பேசினார்.
மதுரை யாதவர் பண்பாட்டுக்கழக தலைவர் பேராசிரியர்.நா.கண்ணன் மருத்துவ முகாமை துவக்கி வைத்தார்.மருத்துவ முகாமில்கிட்டப்பார்வை, தூரப்பார்வை சிகிச்சை,சர்க்கரை நோய், மாறுகண் சிகிச்சை,தலைவலி கண்நீர், அழுத்தநோய்,
லேசிக் லேசர்,கண்புரை,கண்நீர் வடிதல் ஆகிய சோதனைகள் முகாமில் பங்கேற்றவர்
களுக்கு நடத்தப்பட்டது.